ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானமும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாஸாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் பங்கேற்றனர்.
சந்திப்பின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை கோருவது தொடர்பாக பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.