தப்பியோடிய லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் லொறியொன்று மாடுகளை ஏற்றிச் செல்வதை அவதானித்த பொலிஸார், லொறியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், உத்தரவை மீறி லொறி பயணித்துள்ளதாகவும் , இதனையடுத்து பொலிஸாரால் லொறியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் லொறியில் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிங்தோட்டை, மாபுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். சந்தேகநபர் தற்போது சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!