கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தலில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, தவத்திரு வேலன் சுவாமிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.