முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதலீட்டின் ஊடாக பேருவலையில் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்காக 10 லட்சம் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீடாக மேற்கொள்ளப்படவுள்ளன.
பேருவளையில், சைனாபோட் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இரத்தினக்கல் கண்காட்சியின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
பெந்தோட்டையில் இடம்பெற்ற இந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.
இந்த கண்காட்சியை காண்பதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் இரத்தினக்கல் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்குகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உத்தேச சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.