தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் ஆராய உடலத்தைத் தோண்டும் பணிகள் ஆரம்பம்!

பிரபல வர்த்தகர் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இவரது மரணம் தொடர்பான அறிக்கையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது. நிபுணர்கள் குழுவின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரது சடலத்தைத் தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. பொரளையில் அவரது உடலம் புகைப்பட்ட இடத்தில் தோண்டும் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,

பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!