கிழக்கில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் இருப்பு…!தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்.!வியாழேந்திரன் குற்றச்சாட்டு.!

 

தமிழினத்தை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி வருகின்றது.  இதற்கு காரணம் 75 வருடமாக தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை பொய்கூறி ஏமாற்றி வந்ததே காரணமாகும்.

இன்று தமிழர்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கில் தமிழர்களினை அழித்த அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும்.

தமிழர்களை யாரும் அழிக்கவில்லை.இந்த தமிழ் அரசியல் தலைமைகளே பொய்களை கூறி தமிழ் மக்களை அழித்துவந்தனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!